முன்னுரை

மனிதன் அறிவினாலும், நன்மைத்தனத்தினாலும் இயக்கப்பட்டு தெளிவான சிந்தனையோடு செயல்படும் பொழுது அறியாமை அகன்று அறநெறி செழித்தோங்குகின்றது. மனிதனை மனிதனாக்குவது அறிவும், அன்புமே. அறிவுப் பாதையிலும், அன்புப் பாதையிலும் செல்லும்போது எல்லாமே இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் அமைகின்றன. அறியாமை, மூடநம்பிக்கைகளை தவிர்த்து மக்கள் அறிவுப் பாதையில் நடக்க வேண்டும், பகை, வெறுப்பு போன்றவைகளை தவிர்த்து மக்கள் அன்புப்பாதையில் நடக்க வேண்டும். அதனால் தனி மனிதனும், குடும்பங்களும், சமுதாயமும், உலகமும் பயன்பெற வேண்டும் என்ற மேலான நோக்கத்தோடு இந்த "சிந்தனைச் செல்வத்தை" யாவருக்கும் வழங்கும் இந்த சிறிய முயற்சியை மேற்கொள்கிறேன். யாவரும் பயன்பெற்று மகிழ்வுற வாழ்த்துகிறேன்.

எதையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து
அறநெறியில் நடந்து
மேன்மை அடைவோமாக!

அன்புடன்
ஜோசப்பென்சிகர்
தூத்துக்குடி - 628001
தமிழ்நாடு - இந்தியா