முக்கிய குறிப்பு்
கிரேக்க நாடு உலகினுக்கு ஈந்த ஒப்பற்ற சிந்தனை மாமேதை சாக்ரடீஸ் காட்டிய வழியைப் பின்பற்றியும், நம் தங்கத் தமிழ்நாடு உலகினுக்கு ஈந்த பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர் காட்டிய வழிகளைப் பின்பற்றியும், பன்னாட்டு சிந்தனையாளர்கள், கூர்மதியாளர்கள், அறிஞர்கள் ஞானிகள் காட்டிய வழியைப் பின்பற்றியும் 133 பொறுக்கியெடுக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த சிந்தனை பொன்மொழிகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. இதில் எதையும் மாற்றவோ, திருத்தி அமைக்கவோ, சேர்க்கவோ, அகற்றவோ கூடாது . இந்த வேலையை தயவு செய்து யாரும் செய்ய வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.