பொன்மொழிகள்
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
அதிகம் தேவையில்லாத பொருட்களை பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு
தேவையான பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாமல் போய்விடும்.
தேவையான பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாமல் போய்விடும்.
அதிகாரம் தோரணை, பந்தா, அடாவடி போன்றவைகளை பண்பாளர்களிடம் பார்க்க
முடியாது.
அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே அல்லது அப்படி நடக்காமல் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிகழ்ச்சிகள் எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் உண்டு.
அல்லவைகளைத் தவிர்த்து நல்லவைகளையும் இனியவைகளையும் பேசினால் அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் பங்கம்
வராது.
வராது.
அறியாமை மூடநம்பிக்கைகள் என்ற அழுக்குகள் தெளிவான கண்ணாடியை மங்கல் ஆக்கி விடுகின்றன. அகற்றிய பின்னர் தெளிவான கண்ணாடி வழியாக காட்சிகளை தெளிவாகப் பார்க்க முடிகிறது.
அறிந்து தெரிந்து கெடுமதியோடு அடுத்தவர்களை ஏமாற்றுகின்றவன் கடைந்தெடுத்த கயவன்.
அறிவு என்ற தயிரை சிந்தனை என்ற மத்தினால் கடையும்போது ஞானம் என்ற வெண்ணெய் நமக்கு கிடைக்கின்றது.
அனைத்திலும் உயர்நெறி அன்பே.
அன்பு இருக்கும் இடத்தில் சுமை தெரியாது.
அற்பனுக்கு பவுசு
வந்தால்
அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
அன்பு, அறிவு, பண்பு, பணிவு உள்ளவர்களோடு பழகுவது
ஒரு சுகமான அனுபவம்.
ஒரு சுகமான அனுபவம்.
ஆடத் தெரியாதவள் தெருகோணல் என்பாளாம் தன் தவற்றை மறைக்க பிறர் மீது பழிபோட மாட்டான் பண்பாளன்.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.
ஆணவப் பாதை அழிவுப் பாதை.
ஆணவம், அகங்காரம், திமிர், கர்வம், தற்பெருமை போன்றவைகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியவைகள். ஆனால்
சுயமரியாதை என்பது பேணப்பட வேண்டிய ஒன்று.
இது உண்மை என்று சொல்வார்கள். அறிவில்லாதவர்கள்
அதை ஆய்ந்து அறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சிந்தனையாளர்களும், கூர்மதியாளர்களும் அறிவு உள்ளவர்களும் அதை ஆய்ந்தறிந்து அது உண்மை அல்ல என்று அறிந்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அதை ஆய்ந்து அறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சிந்தனையாளர்களும், கூர்மதியாளர்களும் அறிவு உள்ளவர்களும் அதை ஆய்ந்தறிந்து அது உண்மை அல்ல என்று அறிந்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இருக்கிறவன் ஒழுங்காக இருந்தால் சிரைக்கிறவன் ஒழுங்காக சிரைப்பான்.
இருளைப் பழிப்பதை
விட
ஒளியை ஏற்றுவது மேலானது.
இல்லற வாழ்க்கையில் புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை.
இல்லாதவர்களிடமும் இயலாதவர்களிடமும் ஏமாற்றிப் பறிக்கிறவன் மன்னிக்கப்பட முடியாத மாபாதகன்.
இல்லானை இல்லாளும் வேண்டாள். ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் வாய்ச்சொல்.
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா இன்றைய சிறுமி நாளைய குமரி இன்றைய குமரி நாளைய கிழவி இன்றைய கிழவி நாளைய சடலம்.
இவ்வுலகில் யாருக்கும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எதுவும் எப்படியும் நடக்கலாம்.
ஈட்டி எட்டும் வரை பாயும் பணம் பாதாளம் வரை பாயும்.
உழைக்க வேண்டிய காலத்தில் உழைக்காமல் இருந்து விட்டால் ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் ஓய்வை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
உன்னுடைய இல்லாமை இயலாமை பலவீனம் சார்புத்தன்மை போன்றவைகள் உன்னை கொள்ளை அடிப்பதற்கு கெடுமதியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குகின்றன.
உங்களுடைய கஷ்டங்களையும் கவலைகளையும் உற்றவர்களிடம் சொல்லும்பொழுது
உங்களது இதயச்சுமை பாதியாக குறைந்து விடுகிறது.
உங்களுடைய மகிழ்ச்சியை உற்றவர்களிடம் சொல்லும் பொழுது அது இரட்டிப்பு ஆகிவிடுகிறது.
உங்களுடைய மகிழ்ச்சியை உற்றவர்களிடம் சொல்லும் பொழுது அது இரட்டிப்பு ஆகிவிடுகிறது.
எதையும் நம்புகிறவன் முட்டாள். அறிவுப்பூர்வமாக செயல்படுகிறவன் அறிஞன்.
எல்லாரும், எல்லாருக்கும் எல்லாவகையிலும், எல்லா நேரங்களிலும் பிரியப்பட்டவராய் இருப்பது என்பது முடியாத காரியம் ஆனால் கூடுமான வரைக்கும் எல்லோருடனும் சமரசமாய் இருக்க முயற்சிப்பது மேலானது.
எவ்வளவு விலையுர்ந்த செருப்பானாலும் அதை காலிலேதான் அணியவேண்டும் எவ்வளவு பெரிய மனிதனானாலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு விட்டால் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்.
எழுதாத கணக்கு அழுதாலும் வராது.
எழுதி வைக்கப்படுகின்றவைகள் மட்டுமே நிலைத்திருக்கின்றனஎழுதி வைக்கப்படாதவைகள் மறைந்து போகின்றன.
எளிதாக இருப்பதற்கு முன்பு எல்லாமே கஷ்டமாகத்தான் இருக்கும்.
ஏமாறுகிற கூட்டம் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் ஏமாற்றுகிற கூட்டம் இல்லாமல் போய் விடும்.
ஏய்ச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க அய்யா எண்ணிப் பாருங்க.
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
ஐந்தையும் மூன்றையும் கூட்டினால் எட்டுதான் வரும். பஞ்சையும் நெருப்பையும் நெருக்கினால் தீப்பற்றத்தான் செய்யும்.
ஒரு கோணலான குச்சியின் நிழலும் கோணலாகத் தான் இருக்கும்.
ஒருவர் சரியில்லாத ஆசாமி என்று அறிந்து தெரிந்த பின்னரும் அந்த நபருடைய நண்பனாகவும், கூட்டாளியாகவும் தொடர்ந்து இருந்தால் பாதாளப் படுகுழியில் விழுவது நிச்சயம்.
ஒற்றுமையே பலம்.
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு.
கஞ்சன் பிறர் செலவழிப்பதற்காக சேமித்து வைக்கிறான்.
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு வெளியே இருப்பவன் மீது கல் எறியக்கூடாது.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
கனவு காண் குறிவை செயல்படு சாதித்து விடு.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.
காரணம் இன்றி காரியம் இல்லை.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வான் கெட்டிக்காரன்.
குளம் வற்றி விட்டால் நீர்ப்பறவைகள் பறந்து சென்று விடும். மரம் பழுத்துவிட்டால் வெளவால்கள் வந்து சேர்ந்து விடும்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூடா நட்பு கேடாய் முடியும்.
கூழானாலும் குளித்துக்குடி கந்தையானாலும் கசக்கிக்கட்டு
சுத்தம் பேணுதல் நோய்களைத் தடுக்கும்.
கெட்டிக்காரன் புழுகு
எட்டு நாளைக்குத் தான்.
கேக் வெட்டுகிற கத்தியை வைத்து தேக்கை வெட்ட முடியாது.
கேடு வரும் பின்னே
மதி கெட்டு வரும் முன்னே.
கேப்பையில் நெய்வடிகிறது என்று சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போனது?
கோடையில் கிடைத்த குளிர் இளநீராகவும் வாடையில் கிடைத்த கொதி சுடுநீராகவும் இதம் தருகிறது சான்றோர்களின் நட்ப.ு
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
சந்தர்ப்பம் அறியாதவன் சர்வ முட்டாள்.
சமுதாயத்தில் உயர்ந்து நிற்கத் தேவையானவை உயர்கல்வி சீரிய பொருளாதாரம், நன்னடத்தை, கடின உழைப்பு மற்றும்
தெளிவான சிந்தனை.
சரியில்லாதவர்களை இனம் கண்டு ஒதுக்கி
விடுகிறவன் நிம்மதியாகத் தன்வேலையை செய்ய முடியும்.
சாக்கடை அருகே நின்று கொண்டு நறுமணத்தை எதிர்பார்க்க மாட்டான் புத்திசாலி.
சாதிமத,நிற
இனமொழி வேறுபாடு இன்றி மனிதநேயம் பேணிடுவோம் .
சிங்கம் போல் வருபவனையும் பசுபோல் ஆக்கிவிடலாம்
பசுபோல் வருகிறவனையும் சிங்கம்போல் ஆக்கிவிடலாம் எப்படி? நாம் பேசி நடந்து கொள்ளும் விதத்தினால்.
சிரித்து வாழ்வது சிறப்பானது பிறர் சிரிக்க வாழ்வது கேவலமானது.
சிலர் சிலந்திப்பூச்சி இரை தேடுவது போன்று சம்பாதிக்கிறார்கள் சிலர் தேனீக்கள் இரைதேடுவது போன்று சம்பாதிக்கிறார்கள்.
சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் தேவை
ஞானம் அதிகரிக்க அதிகரிக்க ஆசைகளும், பற்றுக்களும் குறைந்து விடுகின்றன.
தங்கம் செய்யாததை சங்கம்
செய்யும்.
தனக்கு எதிரே வருகின்ற மதயானையைப் பார்த்த பின்னர் மாற்றுப் பாதையில் சென்று தப்பிக்கிறவன் கோழை அல்ல அவன் விவேகியே.
தனது இரும்புக் கைகளுக்கு மிருதுவான வெல்வெட் கையுறைகளை அணிந்து கைகுலுக்குகிறவன் காரியக்காரன்.
தடாகத்தின் வெடிப்பில் தாமரைக்கிழங்கு போன்று துன்ப,துயர நேரங்களிலும் இல்லாமையிலும், இயலாமையிலும் உடன் இருப்பவனே உண்மை நண்பன்.
தண்ணீர்ப் பஞ்சம் வரும் முன் கிணற்றைத் தோண்டி வைத்துக் கொள்வான்-புத்திசாலி.
தற்பெருமையாகப் பேசுவதனாலும் பழம் பெருமை பேசித் திரிவதனாலும் ஒருவன் வாழ்க்கையில் முன்னேறிவிட முடியாது.
தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கோழி.
திட்டமில்லாமல் செய்யப்படு
கின்றவைகள் சர்வ குமுப்படியில் முடிவடைகின்றன.
துன்பம்,துயரம்,
வலி,வேதனை, வறுமை, சிறுமை, அவமானம் ஆகிய வேர்களின் வழியாக மரமாகிய எனக்கு கிடைக்கின்றன அனுபவம் என்ற அரிய இனிப்பான கனிகள்.
தூரத்து தண்ணீர் தாகத்துக்கு உதவாது.
தூண்டில்காரன் மிதப்புக்
கட்டையிலேயே கண்ணாயிருப்பான் அறிவாளி முன்னேற்றமே குறிக்கோளாக இருப்பான்.
தென்னந்தோப்பு உரிமையாளர் கவனித்தால் தென்னை மரங்கள் நான்கு ஆண்டு காலத்தில் காய்ப்புக்கு வந்து விடும் கூலியாள் கவனித்தால் காய்ப்புக்கு வர ஆறு ஆண்டுகள் ஆகும்.
தெளிவான சிந்தனையை உடையவர்களின் சொற்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், செயல்பாடுகள் ஆகிய
அனைத்துமே சிறந்தவைகளாகவே இருக்கும்.
தேவைக்கு
அதிகமாக தூங்குபவர்கள் எங்கும் எதிலும் காலதாமதம் செய்பவர்கள் தண்ணீரை
வீணாகச் செலவழிப்பவர்கள் வெற்றிச் சிகரத்தை அடையமாட்டார்கள்.
தேனீக்களிட
மிருந்தும் எறும்புகளிட
மிருந்தும் சுறுசுறுப்பையும் சேமிக்கும் பழக்கத்தையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்து விடும் உஷார் அய்யா
உஷாரு
கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்.
நயவஞ்சகர்களின் நயவஞ்சகத்தை தொடக்கத்திலேயே கண்டு கொண்டால் பாதாளப் படுகுழியில் விழுவதைத் தவிர்க்கலாம்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
நல்லவராய் இருப்பதும் நல்லவற்றையே செய்வதும் தான் மேலானது எல்லா நற்போதனைகளுக்கும் "கரு" இதுதான்.
நன்மைகளையும், சலுகைகளையும் எதிர்பார்த்து முகஸ்துதி பாடுகின்றவர்களும், அடிவருடுகின்றவர்களும் ஊழைக்கும்பிடு போடுகின்றவர்களும் தாங்கள் கீழ்மக்கள் என்பதைக் காட்டுகிறார்கள்.
நன்றி கெட்டவர்களாய்
திரிகின்றவர்கள் தங்களுக்கு
நன்மை செய்தவர்களின்
நெஞ்சத்தைக்
குத்தி திறக்கிறார்கள்.
நாம் பெருமை அடைவதும் சிறுமை அடைவதும் நம்முடைய சொற்களையும் செயல்பாடுகளையும் பொறுத்தது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிறைகுடம் ததும்பாது குறைகுடம் கூத்தாடும்.
நீ ஒரு புத்தகம் எழுதி அதற்காகப் புகழப்படுவது பாராட்டுக்குரியது உன்னைப்பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டு அதில் புகழப்படுவது அதைவிட பாராட்டுக்குரியது.
நீங்கள் என்ன வேலை பார்த்தாலும் சரி. என்ன பதவியில் இருந்தாலும் சரி. முதலில் ஒரு நல்ல மனிதனாய் இருங்கள்.
நீ சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஒரு ஆசான் நீ எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்கக் கூடாது என்பதை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறாய்.
நீ வாழ பிறரைக் கெடுக்காதே.
நீயாத மாட்டை வெள்ளம் கொண்டு சென்று விடும்.
நுழலும் தன் வாயால் கெடும்.
நெருப்பு இன்றி புகை வராது.
பசுத்தோல் போர்த்திய ஓநாய்களை இனம் கண்டு கொண்டால் ஆடுமாடுகள் தப்பித்துக் கொள்ளும்.
பணம், புகழ், அதிகாரம்
நம்மிடம் இருக்கும்பொழுது துதிபாடிகளும், அடிவருடிகளும் நம்மை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள்.
பசிக்காமல் புசித்து நோயைத் தேட
மாட்டான் புத்திசாலி.
பணத்தை வைத்து பல காரியங்கள் சாதிக்க முடியும். ஆனால் பணம்தான் எல்லாம் என்று நினைப்பது தவறு.
பண்பாளர்கள் எள்ளளவு செய்த உதவியைக் கூட என்றுமே மறக்க மாட்டார்கள்.
பண்பாளர்கள் யார் மனதையும் புண்படுத்த மாட்டார்கள்.
பலர் பல காரியங்களை உங்களிடம் பேசலாம். அதில் எது சரி,
எது சரியில்லாதது என்பதை அறிந்து நடந்து கொள்வது உங்களது அறிவைப் பொறுத்தது.
பாலைவனத்தில் ஒட்டகமாக கட்டாந்தரையில் குதிரையாக
தடாகத்தில் அன்னப்பறவையாக மாறிக் கொள்கிறவன் வெற்றிக்கொடியை நாட்டுகிறான்.
பால் இருக்கும்
பழம் இருக்கும்
பசி இருக்காது
பஞ்சு மெத்தையில் காற்று வரும்
தூக்கம் வராது
மனது
சரியில்லை என்றால்.
பிறரைப் பயன்படுத்தி வாழ்வதை விட பிறர்
பயன்பெற
வாழ்வது போற்றுதற்குரியது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். பன்றியோடு சேர்;ந்த கன்றும் மலம்தின்னும்.
பெரிய பதவிகளில் இருப்பவர்கள் பணிவோடும், எளிமையோடும் நடந்து கொள்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியை தருகிறது. அவர்கள் மீதுள்ள மரியாதை அதிகமாகிறது.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
போதைப்பழக்கம் ஒருவழிப்போக்கனைப் போன்று நம்மிடம் வருகிறது அடுத்தபடியாக அது நமக்கு ஒரு நண்பனைப் போன்று மாறி விடுகிறது. இறுதியில் அது நமக்கு எஜமானனாகி நம்மை அடிமையாக்கி ஆட்டிப் படைக்கிறது.
"மகான்”
என்பவர் அவர்களுடைய பெற்றோர்களுக்கு மட்டும் "மகன்”
மற்றவர்களுக்கெல்லாம் அவர்
‘மகான்”.
மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது.
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.
மலை
அடிவாரத்திலிருந்து பார்க்கிறவனைவிட மலை உச்சியில் இருந்து பார்க்கிறவன் அதிகம் பார்க்கிறான்.
மறந்து மன்னித்து தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்கிறவன் மனிதப்
புனிதன்.
மனம்போன போக்கிலும் கால்போன போக்கிலும் போகிறவன் கரைசேர மாட்டான்.
மனிதன் அறிவினாலும் நன்மைத்
தனத்தினாலும் இயக்கப்படும் பொழுது அவனது செயல்பாடுகள் சாலச் சிறந்தவைகளாக இருக்கின்றன.
முட்டாள் எவனையும் தலைவனாக ஏற்றுக் கொள்வான். அறிவாளியோ நல்லவனாகிய ஒருவல்லவனை மட்டுமே தலைவனாக ஏற்றுக் கொள்வான்.
முதலைகள் நிறைந்த குளத்துக்குள் குதிப்பவனை துணிச்சல்காரன் என்று பாராட்ட முடியாது. அவன் மடையனே.
முற்றும்
துறந்த பற்றற்றவனுக்கு இராஜ்யமும் ஒன்றுதான் பூஜ்யமும் ஒன்றுதான்.
முன்கோபமும், கடுஞ்சொற்களும் முற்றிவிட்டால் விளைவது கைகலப்பும், தாக்குதலுமே.
வந்த மாட்டை கட்டுவது கிடையாது போனமாட்டை தேடுவது கிடையாது. அப்படியானால் அந்த பால்பண்ணை எந்த லட்சணத்தில் இயங்கும்?
வல்லவனுக்குப் புல்லும்
ஆயுதம்.
வாழ்வே மாயம் உலகே மாயம்
நாம் காணும் சுகமே மாயம் என்ற உண்மையை உணர்வான்
ஞானி.
விட்டுக் கொடுக்கிறவன் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுப்பதில்லை.
வினை விதைத்தவன் வினை அறுக்கிறான் தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்
அவரை போட்டால் அவரை முளைக்கும் துவரை போட்டால் துவரை முளைக்கும்.
வீண் பேச்சைத் தவிர்த்துஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றவர்கள் சிகரத்தைத்
தொட்டு விடுவார்கள்.
வேலையை பளுவாக நினைக்காமல் கடமையாக நினைப்பவர்கள் வேதனையை சந்திக்க மாட்டார்கள்.